tamilkurinji logo
 

சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின் மறுப்பு,


சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின் மறுப்பு

Tuesday , 7th February 2012 07:44:48 AM



ஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.

அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு இருவரும் தயாராகிறார்கள் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நான் கேரளாவைச் சேர்ந்த பெண். சம்பிரதாய பழக்க வழக்கங்களை கடை பிடிக்கும் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். எனது திருமணம் நான் பிறந்த ஊரான கேரளாவில் தான் நடக்கும். என் குடும்ப சம்பிரதாயப்படியே அது நடக்கும். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதில், சல்மான்கானும் ஒருவர்.

அவருக்கும் எனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சல்மான்கான் என்னை விட வயதில் பெரியவர். அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் கியூவில் வந்து நிற்பார்கள்.

சல்மான்கானுக்கும் எனக்கும் நீங்கள் கற்பனை செய்கிற மாதிரி எந்த உறவும் கிடையாது. 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் எனது திருமணத்தை பற்றி யோசிப்பேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்த அறிக்கை மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அசின் கூறியுள்ளார்.



    Tags :    
சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின் மறுப்பு, சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின் மறுப்பு, சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின் மறுப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு
இந்தி நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. பல வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இருவரும் இப்போது திருமணத்துக்கு தயாரானதற்குக் காரணம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in