tamilkurinji logo
 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அமைதி போராட்டம் நடிகர் சிம்பு பேட்டி,Simbu announces protest against Jallikattu ban, seeks support of Tamilians

Simbu,announces,protest,against,Jallikattu,ban,,seeks,support,of,Tamilians


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அமைதி போராட்டம் நடிகர் சிம்பு பேட்டி

Thursday , 12th January 2017 08:57:46 AM
நடிகர் சிம்பு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகம் என் தாய்நாடு. தமிழ் எனது தாய்மொழி. சிறுவயதில் இருந்தே தமிழ் மீது பற்றோடு வளர்ந்திருக்கிறேன். எனது வீடு, சொத்து அனைத்தையுமே தமிழ் தான் எனக்கு கொடுத்திருக்கிறது. அந்த தமிழுக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் இன்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை என்று அடுக்கடுக்கான துன்பங்களை தமிழர்கள் சந்திக்கிறார்கள். இதை எதிர்த்து அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டங்கள் நடத்துவது வழக்கமாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கும் இன்று எதிர்ப்பு வந்துவிட்டது. ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. அது தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம். ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள சிலரே இதனை எதிர்ப்பது வேதனையாக இருக்கிறது.


ஜல்லிக்கட்டை எதிர்க்கும் அந்த நபர்கள் தான் எல்லோரையும் போல பசும்பால் குடித்து வருகிறார்கள். அது மிருகவதை இல்லையா? எங்கள் கலாசாரத்தை எதிர்ப்பதற்கு இவர்கள் யார்? இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் உணர்வோடு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் தனித்தனியாக போராட்டம் நடத்துகிறார்கள். இது பலன் அளிக்காது.

அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை 5 மணிக்கு என் வீட்டின் முன்னால் 10 நிமிடங்கள் கையை கட்டிக்கொண்டு மவுனமாக நிற்பேன். இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும், சாலைகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் தமிழர்கள் கைகட்டி 10 நிமிடங்கள் மவுனமாக நிற்கவேண்டும். இதன்மூலம் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் அனைவரும் ஒன்று சேருங்கள்.

எனது கோரிக்கையை ஏற்காவிட்டால் கவலை இல்லை. அமெரிக்காவில் 10 வருடங்கள் தங்குவதற்கு எனக்கு ‘விசா’ இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.  இவ்வாறு சிம்பு பேசினார்.    Tags :    
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அமைதி போராட்டம் நடிகர் சிம்பு பேட்டி,Simbu announces protest against Jallikattu ban, seeks support of Tamilians ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அமைதி போராட்டம் நடிகர் சிம்பு பேட்டி,Simbu announces protest against Jallikattu ban, seeks support of Tamilians ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அமைதி போராட்டம் நடிகர் சிம்பு பேட்டி,Simbu announces protest against Jallikattu ban, seeks support of Tamilians
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ வெளியானதால் பரபரப்பு
கன்னட நடிகை சஞ்சனா நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகள் தண்டுபாளையா–2 படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் வீடியோக்கள் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு மாநில மகளிர் ஆணையம்

மேலும்...

 சமூக விழிப்புணர்வு இசை ஆல்பத்தில் இனியா
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இசை ஆல்பத்தில் நடித்திருக்கும் நடிகை இனியாவுக்கு சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு

மேலும்...

 போதை பொருள் கும்பலுடன் நடிகர்-நடிகைகளுக்கு தொடர்பு
ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப்,

மேலும்...

 "நாங்கள் நேர்மையாக இருக்கிறோம்" - லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in