tamilkurinji logo
 

ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது ,jayalalitha life cinema

jayalalitha,life,cinema

ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது

Thursday , 5th January 2017 06:31:19 PM
திரை உலகிலும், அரசியலிலும் தனக்கென்று தனி பாணியை உருவாக்கி வெற்றி பெற்றவர் ஜெய லலிதா.

கடந்த மாதம் 5-ந்தேதி அவர் மறைந்தார். இது தமிழக மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமாவிலும், அரசியலி லும் சாதனை படைத்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தனிசிறப்பு கொண்டது. அது படமானால் நடிக்க விரும்புகிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறி இருந்தார்.


இதையடுத்து ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் முன் னாள் மத்திய மந்திரியும், தெலுங்கு பட உலகின் பிரபல டைரக்டரும், தயாரிப்பாளரும், தமிழ், தெலுங்கு கன்னட படங்களை இயக் கிய வருமான தாசரி நாரா யணராவ் ஜெயலலிதா வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘அம்மா’ என்று பெயர் சூட்டப்படுகிறது.

இதற்காக ‘அம்மா’ என்ற பெயரை அவர் பதிவு செய்து இருக்கிறார். இதை தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்து இருக்கிறார். இந்த படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ரம்யாகிருஷ்ணன், திரிஷா, சிம்ரன், ஹேமமாலினி ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இவர்களில் ஒருவர் இந்த வேடத்துக்கு தேர்வு செய்யப் படலாம் என்று கூறப்படு கிறது.

இந்த படத்தை தயாரிப்பது குறித்து தாசரி நாராயணராவ் கூறியதாவது:-

நடிகை என்ற முறையி லும், அரசியல் தலைவர் என்ற முறையிலும் ஜெயலலிதா எனக்கு நெருக்கமானவர். நான் 140 படங் களில் பலருடன் பணி புரிந்திருக்கிறேன். அவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர். இந்த படத்தை ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையை வைத்து உருவாக்குவதா? அவர் அரசியலுக்கு மாறியதை வைத்து தயாரிப்பதா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஜெயலலிதா தமிழில் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்து இருக்கிறார். அனைத்தும் வெற்றிப்படங்கள். என்.டி.ராமராவுடன் ஒரு டஜன் தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல அரசிய லிலும் சாதனை படைத்து இருக்கிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை பற்றிய படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில்  அல்லது 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும். இவ்வாறு தாசரி நாராயணராவ் கூறினார்.

இந்த படத்தில் கதாநாயகி யாக யார் நடிப்பார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நடிகர்-நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டபிறகு, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.    Tags :    
ஜெயலலிதா வாழ்க்கை  சினிமா ஆகிறது
,jayalalitha life cinema ஜெயலலிதா வாழ்க்கை  சினிமா ஆகிறது
,jayalalitha life cinema ஜெயலலிதா வாழ்க்கை  சினிமா ஆகிறது
,jayalalitha life cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கோவாவில் நடிகை நிவேதிதாவுக்கு பாலியல் தொல்லை
பிரபல கன்னட நடிகை நிவேதிதா. இவர் தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். நிவேதிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் கோவாவுக்கு செல்ல முடிவு எடுத்தனர். காதலரால் உடனடியாக

மேலும்...

 அப்பாவைப் போல மகள் விவேக் பாராட்டு-சவுந்தர்யா நெகிழ்ச்சி
அப்பாவைப் போல மகள். நம்பிக்கையளிக்கிறார் என்ற விவேக்கின் பாராட்டுக்கு சவுந்தர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ள

மேலும்...

 விஜய் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது: அமலாபால்
இயக்குனர் விஜய் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை என்று அவரது முன்னாள் மனைவியும், நடிகையுமான அமலாபால் கூறியுள்ளார்இயக்குனர் விஜய்யை அமலாபால் காதலித்து திருமணம் செய்தார். அவரை விட்டுப்பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை விஜய்

மேலும்...

 ஜல்லிக்கட்டு விவகாரம் முதல்வரிடம் லாரன்ஸ் மற்றும் மாணவர்கள் முன்வைத்த 3 கோரிக்கைகள்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த  போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டம்  கொண்டுவந்த பிறகும், நிரந்தர சட்டம் வேண்டி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in