tamilkurinji logo
 

புது காதலனை தேடிய தீபிகா படுகோன்,deepika padukone new lover,tamil cinema news

deepika,padukone,new,lover,tamil,cinema,news


புது காதலனை தேடிய தீபிகா படுகோன்

Friday , 19th April 2013 12:28:24 AM



புது காதலனை தீபிகா படுகோன் தேர்வு செய்ததால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான தீபிகா படுகோன் ஹீரோ ரன்வீர் சிங்குடன் நெருக்கமான நடப்பில் இருந்தார்.

இருவரும் காதலித்தனர். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஜோடியாக வந்தனர். சமீபத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். தீபிகாவை உசுப்பேற்றும் வகையில் கேத்ரினா கைப்புடன் நெருக்கமாக பழகி வருகிறார் ரன்வீர் ச¤ங்.

இந்நிலையில் வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதை தீபிகா தவிர்த்து வந்தார். தற்போது ‘ராம் லீலா‘ என்ற படத்தில் தீபிகா நடித்து வருகிறார். ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்ல மூன்றரை மணி நேரம் ஆகும். இதற்காக அதிகாலை 2.30 மணிக்கே ஓட்டலிலிருந்து மேக்கப் அணிந்துகொண்டு புறப்பட வேண்டி இருக்கிறது. தீபிகாவும், சுசாந்தும் அதிகாலையிலேயே ஒரே காரில் புறப்படுகின்றனர்.

அப்போது இருவரும் மனம் விட்டு பேசும் தருணம் கிடைக்கிறது. இதில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருக்கின்றனர். இவர்களின் நட்பு இப்போது காதலாக மலர்ந்திருக்கிறது என்று பட யூனிட்டில் பேசப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தீபிகாவை மணந்துகொள்வதற்கான தனது விருப்பத்தையும் சுசாந்த் தெரிவித்தாராம். ஆனால் அது பற்றி யோசிக்க அவகாசம் வேண்டும் என்று தீபிகா கூறிவிட்டாராம். பாலிவுட்டில் இவர்களின் காதல் கிசுகிசு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



    Tags :    
புது காதலனை தேடிய தீபிகா படுகோன்,deepika padukone new lover,tamil cinema news புது காதலனை தேடிய தீபிகா படுகோன்,deepika padukone new lover,tamil cinema news புது காதலனை தேடிய தீபிகா படுகோன்,deepika padukone new lover,tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆலிவுட் நடிகர் டாம் குரூஸ் - நடிகை கெதிஹோல்ம்ஸ் விவாகரத்து
பிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவர் நடிகை கெதி ஹோல்ம்ஸ் (33) என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூரி என்ற 6 வயது மகள் இருக்கிறாள். டாம்குருசுக்கு முன்னாள் மனைவி

மேலும்...

 அமெரிக்கன் ஈஸ்ட்
தனி மனித வாழ்வில் தினம் ஒரு பூகம்பம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் மாறுபட்ட நாட்டில் வாழத் தலைப்படும் புலம்பெயர் மனிதர்களுக்கு பண்பாடு, மதரீதியானசுனாமிகளின் தாக்கம் அதிகம். அப்படியொரு சுழலில் சிக்கித் தவிக்கும் எகிப்திய இஸ்லாமிய மனிதனின் கதைதான் ‘அமெரிக்கன் ஈஸ்ட்’

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in