tamilkurinji logo
 

வாடகை வீடு தொடர்பாக நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது -நீதிமன்ற உத்தரவு,nameetha tamil cinema news

nameetha,tamil,cinema,news,

வாடகை வீடு தொடர்பாக நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது -நீதிமன்ற உத்தரவு

Wednesday , 4th January 2017 05:54:50 PM



'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. இவர் சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார்.


நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், வீட்டின் உரிமையாளர் தனக்கு பல விதமான தொந்தரவுகளை கொடுக்கிறார். வீட்டை நான் காலி செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்படுகிறார்.

மேலும் ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.

எனவே, அமைதியான முறையில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது. என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்.

என்னை ரவுடிகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகள் மூலமும் தொந்தரவு செய்ய வீட்டின் உரிமையாளருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு 13-வது சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு தடை விதித்து’ உத்தரவிட்டார்.



    Tags :    
வாடகை வீடு தொடர்பாக நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது -நீதிமன்ற உத்தரவு,nameetha tamil cinema news வாடகை வீடு தொடர்பாக நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது -நீதிமன்ற உத்தரவு,nameetha tamil cinema news வாடகை வீடு தொடர்பாக நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது -நீதிமன்ற உத்தரவு,nameetha tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள்: ஜோதிகா
நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்று இயக்குநர்களுக்கு ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மேலும்...

 என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்-'மைனா' நந்தினி உருக்கம்
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என்று

மேலும்...

 பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது’ நடிகை கங்கனா ரணாவத்
‘‘பாலியல் தொல்லை குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்பட கூடாது’’ என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.‘‘பாலியல் தொல்லை குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்பட கூடாது’’ என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.இந்தி திரைப்பட இயக்குனர் விகாஸ் பால் மீது அவரது திரைப்பட

மேலும்...

 மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in